×

திருப்புத்தூரில் விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்

திருப்புத்தூர், ஆக.20:  திருப்புத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் செய்யும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. வருகிற செப்டம்பர் 2ம் தேதி விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி திருப்புத்தூர் மற்றும் பிள்ளையார்பட்டியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த சிலைகளை காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்தபதி விக்னேஸ்வரன் தலைமையில் 6 பணியாளர்கள் செய்துவருகின்றனர். சதுர்த்தி முடிந்தவுடன், விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பது வழக்கம். இதற்காக மரக்கூல், மைதா, கிழங்குமாவு, பேப்பர் மாவு ஆகியவற்றை ஒன்று சேர்த்து பல வண்ணங்களில் சிலை தயாரித்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு தலை, கை, கால் என தனித்தனியே மோல்ட் செய்த சிலைகளை தற்போது ஒன்று சேர்த்து சுமார் 3 அடி முதல் 10 அடி வரை உயரமுள்ள சுமார் 200 விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிலைகள் அனைத்தையும் முழுமையாக உருவாக்கிய பின்னர் எளிதில் கரையைக்கூடிய வாட்டர் கலர்  தீட்டப்படுகிறது.

இதில் விநாயகர் மூஷிக தேரில் அமர்ந்து இருப்பது போன்ற வடிவம், அன்னம், சிம்மம், கருடன், ஆஞ்சநேயர், பசு விநாயகர் பின் நிற்பது போன்ற வடிவம், நாகம் குடைபிடித்தது போன்ற வடிவம் உள்ளிட்ட பல வடிவங்களில் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலை ரூ.3 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை உள்ளது. இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் முழுமையாக தயார் செய்த பின்பு சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புத்தூர், காரைக்குடி, சிவகங்கை, சிங்கம்புணரி, காளையார்கோயில், தேவகோட்டை, புதுவயல், கல்லல், உள்ளிட்ட ஊர்களில் உள்ள பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது. காளையார்கோவில், ஆக.20: காளையார்கோவில் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே காளையார்கோவில், புலியடிதம்மம், சருகணி, கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை, கொல்லாவயல், சாத்தரசன்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் வீரமணி பகிர்மானம் சிவகங்கை அறிவித்துள்ளார்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...