திருப்புவனத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

திருப்புவனம், ஆக. 20:  திருப்புவனம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியை தேவிகா ராணி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு மாணவிகளுக்கு டெங்கு விழிப்புணர்வு கருத்துக்களை விளக்கி பேசினார். மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளில் சென்ற பேரணியில் விழிப்புணர்வு கோஷங்களை முழங்கினர். இதில் பூவந்தி ஆரம்ப சுகாதார பணியாளர்கள் பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED காரைக்குடியில் பட்டா கத்தியுடன் ரவுடிகள் ரகளை