×

பரமக்குடியில் மண்டல யோகாசன போட்டிகள்

பரமக்குடி, ஆக.20:  பரமக்குடியில் மண்டல அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது. பரமக்குடியில் மண்டல அளவிலான யோகாசன போட்டிகள் கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியினை எம்.எல்.ஏ. சதன்பிரபாகர், அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆர்ணவ் யோகா மையத்தின் தலைமை பயிற்சியாளர் ராஜ்குமார் வரவேற்றார். இந்த போட்டியில் பரமக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, காரைக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் 5 வயது சிறுவர்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை கலந்து கொண்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, கூட்டுறவு சங்க தலைவர் ஜமால், கீழ முஸ்லீம் பள்ளி தலைமையாசிரியர் அஜ்மல்கான் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் யோகா ஆசிரியர் முத்துகுமார் நன்றி கூறினார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை