திண்டுக்கல் கூட்டுறவு வங்கி ஏரியாவில் ஆளும்கட்சியினரின் பிளக்ஸ் கார்களால் ‘செம டிராபிக்’

திண்டுக்கல், ஆக. 20: திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி ஏரியாவில் ஆளும்கட்சியினர் வைத்த பிளக்ஸ்கள், வந்த கார்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவியேற்று விழா  வங்கி வளாகத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி பொறுப்பேற்கும் அதிமுகவினருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல்- திருச்சி ரோடு மேம்பாலம் இறங்கும் இடத்தில் இருந்து வங்கி வளாகம் வரை 30க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை வைத்திருந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட கார்களில் வந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பழைய கரூர் சாலையில் ரயில்வே சுரங்க பாதை நடந்து வருவதால் கரூர் சாலை வழியாக வாகனங்களில் செல்பவர்கள், வருபவர்கள் மத்திய கூட்டுறவு வங்கி வழியாகத்தான் வருகின்றனர். இதில் நேற்று பதவியேற்பு விழாவுக்காக ஆளும்கட்சியினர் அதிக பிளக்ஸ்களை வைத்து மேலும் இடையூறை ஏற்படுத்திவிட்டனர். இதனால் வாகனங்களில் சென்று வர மிகவும் சிரமப்பட்டோம். ஆளுங்கட்சியினர் என்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசாரும் கண்டும், காணாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இனி வரும் காலங்களிலாவது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பிளக்ஸ்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Advertising
Advertising

Related Stories: