நிரப்பப்படாத காலியிடங்கள் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

பழநி, ஆக. 20: பழநி அருகே சின்னக்கலையம்புத்தூர் பழநியாண்டவர் மகிளர் கல்லூரியில் வேலைவாய்ப்பு மையம் சார்பில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முதுகலை, இளங்கலை மாணவர்களுக்கான இம்முகாமிற்கு முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். மேலாண்மை நிறுவன நிர்வாக பூமாஅருண் வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத்துறை தேர்வுகள், பணிவாய்ப்புகள், அவற்றிற்கு தயாராகும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை பேரவை துணை தலைவர் முத்துலட்சுமி, ஆங்கிலத்துறை பேராசிரியர் வனிதா, வணிகவியல்துறை பேராசிரியர் சுமித்ரா தேவி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: