வத்தலக்குண்டுவில் இன்று மின்தடை

வத்தலக்குண்டு, ஆக. 20: வத்தலக்குண்டு உப மின்நிலையத்தில் இன்று (ஆக.20, செவ்வாய்) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வத்தலக்குண்டு, மல்லணம்பட்டி, கோம்பைப்பட்டி, கணவாய்பட்டி, ஜி.தும்மலப்பட்டி, பழைய வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் எழுவனம்பட்டி உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை எழுவனம்பட்டி, வெறியப்பநாயக்கன்பட்டி, விராலிப்பட்டி,
Advertising
Advertising

ராமநாயக்கன்பட்டி,  பண்ணைப்பட்டி, மஞ்சளாறு ஆணை குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பால்பாண்டி

தெரிவித்துள்ளார்.

Related Stories: