குறைகளை மனுக்களாக தந்தால் உடனடி நடவடிக்கை

நத்தம், ஆக. 20: பொதுமக்கள் குறைகளை மனுக்களாக தந்தால் குடிநீர், சாலை, கழிப்பறை வசதிக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என வேலுச்சாமி எம்பி தெரிவித்தார். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி எம்பி வேலுச்சாமி நத்தம் பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். முளையூர், எரமநாயக்கன்பட்டி, உலுப்பக்குடி, புன்னப்பட்டி, மதுக்காரம்பட்டி, சாத்தம்பாடி, காசம்பட்டி, வத்திபட்டி, லிங்கவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து பின் அவர் பேசியதாவது, ‘இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் திண்டுக்கல் பாராளுமன்றத்தில் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உங்களை சந்திக்க வந்துள்ளேன். இப்பகுதியில் உள்ள குறைபாடுகளை மனுக்களாக நீங்கள் கொடுத்தால் அதற்கான தீர்வு காண உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக குடிநீர், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவேன்’ என்றார். உடன் ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ, தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார், வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், பேரூர் செயலாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதுருஸ்ஸமான், முன்னாள் ஊராட்சி தலைவர் பவுர், ஒன்றிய துணை செயலாளர்கள் தன்ராஜ், குப்புச்சாமி, மாவட்ட பிரதிநிதி கதிரவன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர். முன்னதாக எம்பிக்கு அனைத்து கிராமங்களிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

Related Stories: