சம்பா சாகுபடிக்கு 50% மானியத்தில் விதைநெல் விநியோகம்விவசாயிகள் பயன்பெறலாம்

திருச்சி, ஆக.20: சம்பா சாகுபடிக்கு 50 சதவீத மானியத்தில் விதை நெல்லை வாங்கி விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண் அலுவலர் தெரிவித்துள்ளர்.திருவெறும்பூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் நடவிற்கு முன்னர் பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பை போன்றவற்றை பயிரிட்டு விதைத்த 45ம் நாள் செடிகளை வயலில் மடக்கி உழுவதால் நெல் பயிருக்கு தேவைப்படும் உர செலவில் 25 சதவீதம் குறையும்.சம்பா சாகுபடிக்காக 50 சதவீதம் மானிய விலையில் விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான மத்திய கால ரக விதை நெல் வாளவந்தான்கோட்டை மற்றும் மேலகல்கண்டார்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் விதை கிராம திட்டம் மூலம் 50 சதவீதம் மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நெல் சம்பா பயிரில் இலைப்புள்ளி மற்றும் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்த எதிர் உயிரி பாக்டீரியா சூடோமோனாஸ் புளுரசன்ஸ், 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நெல் மகசூலை அதிகரிக்க திருந்திய நெல் சாகுபடி முறைகளை கடைபிடித்து காய்ச்சலும் பாய்ச்சலுமாக வயலை பராமரிக்க வேண்டும். நெல் தூர்கள் அதிகமானால்தான் அதிக மணிகள் உருவாகி மகசூல் அதிகரிக்கும். எனவே, தேவையான நுண்ணுட்டச்சத்து மற்றும் உயிர் உரங்களை வேளாண் விரிவாக்க மையத்திலிருந்து வாங்கி பயன்பெறலாம் என திருவெறும்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்தர் பிரேமகுமாரி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: