திருநங்கைகள் தீச்சட்டி எடுத்து சிறப்பு வழிபாடு

திருவெறும்பூர், ஆக.20: நாட்டில் மழை பொழிந்து மக்கள் நலமோடு வாழ வேண்டும் என திருச்சி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் தீச்சட்டி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.நாடு முழுவதும் மழை பெய்து மக்கள் நல பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவெறும்பூர் அருகே வேங்கூர் கீழமுருக்கூரில் உள்ள சப்பானி கருப்பு கோயிலில் இருந்து தென்னிந்திய திருநங்கை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவி மோகனா தலைமையில் திருநங்கைகள் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து சாமிநாதபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் வழிபாடு, சிறப்பு யாகம் நடத்தி அன்னதானம் செய்தனர்.பின்னர் மோகனா கூறுகையில், பின்தங்கிய மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கை அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகம் நன்றாக இருந்தால்தான் நாங்களும் நன்றாக இருக்க முடியும். நாட்டில் மழை பொழிந்து மக்கள் நலமோடு வாழ வேண்டும். அதற்காக திருச்சி மாவட்ட திருநங்கைகள் தீச்சட்டி எடுத்து யாகம் வளர்த்து அன்னதானம் வழங்கி பூஜைகள் செய்தோம். மக்களிடம் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தும் நாங்கள் ஒருநாள் வருமானத்தை மக்களுக்காக இந்த யாகத்தை நடத்தி வருகிறோம். உங்களில் ஒருவராக எங்களை நினையுங்கள். தமிழகத்தில் 2 லட்சத்து 370 பேர் மூன்றாம் பாலினத்தவர் இருப்பதாக கணக்கெடுப்பு தகவல் வந்துள்ளது என்றார்.விழாவில் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் பலரும் கலந்துகொண்டு தீச்சட்டி எடுத்து யாக பூஜையிலும் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: