என்ஐடியில் முன்னாள் மாணவர்களுக்கு விருது

திருச்சி, ஆக.20: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) படித்து பல்வேறு துறைகளில் சாதித்த முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்ததுகல்லூரி துணை முதன்மையாளர் நிஷா வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் கிருஷ்ணசாய் முன்னிலை வகித்தார். என்ஐடி இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் தலைமை வகித்து பேசினார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பிரிவின் 1979ம் ஆண்டு மாணவர் மறைந்த ராஜன்நாராயணன் சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது. இயந்திரப் பொறியியல் பிரிவின் 1985ம்ஆண்டு மாணவர் பேராசிரியர் வாசுமோகனுக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியதற்கான விருது வழங்கப்பட்டது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பிரிவின் 1979ம் ஆண்டு மாணவர் அட்மீரல் குமார் நாயருக்கு பொதுப்பணித்துறை பிரிவில் கவுரவ விருது வழங்கப்பட்டது. கல்லூரி முதன்மையாளர் ராமன்சங்கரநாராயணன் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: