சூரியன் எப்எம் 93.5 சார்பில் 15 ஆயிரம் ரசிகர்களை பரவசப்படுத்திய சித்ராம்

திருச்சி, ஆக.20: திருச்சி சூரியன் எப்எம் 93.5 சார்பில் திருச்சியில் நடந்த மிகபிரமாண்ட ரிதம் இசை நிகழ்ச்சியில் பாடல்களை பாடிய சித் ராம் 15ஆயிரம் ரசிகர்களை பரவசப்படுத்தினார்.திருச்சி மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் மிக முக்கியமானதாக திகழும் சூரியன் எப்எம் 93.5-ன் சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை 5 மணியளவில் திரைப்பட பின்னணி பாடகர் சித் ராமின் பிரமாண்டமான “ரிதம்” இசை நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் சித் ராம் விசுவாசம் திரைப் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல், கடல் திரைப்படத்தில் இடம்பெற்ற அடியே பாடல் உள்பட ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை பரவசப்படுத்தினார். சுமார் 15,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது கல்லூரிகளுக்கு இடையே நடத்தப்பட்ட இசைப்போட்டியில் வெற்றி பெற்ற கலைக்காவிரி மற்றும் பிஷப்ஹீபர் கல்லூரி அணிகளுக்கு ரூ.5,0000த்திற்கான காசோலையினை சத் ராம் வழங்கினார்.

மேலும் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த விளம்பரதாரர்கள் அனைவருக்கும் சித் ராம் நினைவு பரிசு வழங்கி கவுரவப்படுத்தினார். இசை நிகழ்ச்சி மாலை 6மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை இடைவிடாது தொடர்ந்து நடந்தது.இந்த நிகழ்ச்சியில் சித் ராம் ஒருவரே அனைத்து பாடல்களையும் பாடியதோடு இருக்கையில் அமர்ந்து இருந்த ரசிகர்களையும் பாடவும், ஆடவும் வைத்தார். குறிப்பாக கண்ணான கண்ணே மற்றும் கண்ணே கலைமானே பாடல்களை சித் ராம் பாடியபோது இருக்கையில் இருந்த ரசிகர்கள் தங்கள் கைகளில் இருந்த செல்போன்களில் உள்ள டார்ச் லைட்களை ஒளிரச்செய்தது காண்போரை கவரும் விதமாக இருந்தது.இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளை திருச்சி சூரியன் எப்எம் குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: