×

பஞ்சப்பூர் குளத்தை முறையாக தூர் வார வேண்டும் பாசன விவசாயிகள் சங்கம் மனு

திருச்சி, ஆக.20: பஞ்சப்பூர் குளத்தை முறையாக தூர் வாரவேண்டும் என பாசன விவசாயிகள் மனு அளித்தனர்.திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியிடம் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் 6ம் கிளை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அளித்த மனுவில், ‘உய்யக்கொண்டான் வாய்க்கால் மூலம் நிரம்பும் பஞ்சப்பூர் குளம் தூர்வாரும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த குளம் தூர்வாரும் பணி தண்ணீர் திறக்கப்படும் குழுமி அல்லாமல் கலிங்கி பகுதியில் தூர்வாருகின்றனர். இதனால் பயனில்லை. முறையாக தூர் வார வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருவெறும்பூர் வட்டக்குழு சார்பில் அளித்த மனுவில், மேட்டூரிலிருந்து காவிரியில் கடந்த 13ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து 17ம் தேதி கல்லணையில் அனைத்து ஆறுகளிலும் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. திருவெறும்பூர் தாலுகாவில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உய்யக்கொண்டான் கட்டளை கால்வாய் மூலம் நேரடியாகவும், ஏரி, குளங்கள் மூலமும் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே உடனடியாக உய்யக்கொண்டான் மற்றும் கட்டளை கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.


Tags :
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை