61வது வார்டில் திறந்த வெளி நூலகம் திறப்பு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு

திருச்சி, ஆக.20: திருச்சி மாநகராட்சி சார்பில் தஞ்சாவூர் ரோட்டில் தெருவோர இரண்டாவது திறந்தவெளி நூலகம் திறக்கப்பட்டது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.திருச்சி மாநகராட்சி 61வது வார்டு காட்டூர் பர்மா காலனி தஞ்சாவூர் ரோட்டில் மில்பஸ்டாப் அருகில் திறந்தவெளி நூலகம் ரூ.14.30லட்சம் செலவில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறுகையில், இங்கு சுமார் 1000 புத்தங்கங்களை வைப்பதற்கு தேவையான வசதிகள் மற்றும் அங்கேயே அமர்ந்து படிப்பதற்கு தேவையான அமர்வு நாற்காலிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது மக்கள் தாங்கள் படித்து முடித்த புத்தங்கங்களை மற்றவர்கள் படிப்பதற்காக இங்கு வழங்கிவிட்டு, இந்த நூலகத்தில் இருக்கும் வேறு புத்தகங்களை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம், என்ற புதிய முறையில் தொடங்கப்பட்டுள்ளது.நல்ல நூல்களை பகிர்ந்து கொள்ளவும், புதிய நூல்களின் அனுபவம் பெறவும் இந்த நூலகம் ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது. பொதுமக்களும் ஆர்வத்துடன் புத்தகங்களை வழங்குவதுமாகவும், புதிய புத்தகங்கள் எடுத்து செல்வதுமாக இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.நூலகத்தை பராமரிக்க பாதுகாவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நூல்கள், வருகைப்பதிவேடு பராமரிக்கிறார். ஏற்கனவே இந்தியாவில் முதல் முறையாக திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள ஆபிசர் காலனி, திருச்சி மாநகராட்சி சார்பில் தெருவோர திறந்தவெளி நூலகம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: