×

பண்ணாங்கொம்பு கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருச்சி, ஆக.20: பண்ணப்பட்டி ஊராட்சியை இரண்டாக பிரித்து பண்ணாங்கொம்பை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டுமென கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் டிஆர்ஓ சாந்தியிடம், மணப்பாறை சிறு தானிய உற்பத்தியாளர்கள் விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சி கீழ்பாகம் மேல் பாகம் என்று பல்வேறு பெரிய ஊர்களையும் பல குக்கிராமங்களையும் உள்ளடக்கி உள்ளது. பல குக்கிராமங்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் சென்றடையாமல் கிராமங்கள் வளர்ச்சி பெறாமல் உள்ளன.

இதற்கு முக்கிய காரணம் மிகப்பெரிய ஊராட்சியாக இருப்பது தான். ஊராட்சி நிதியை ஊராட்சி கிளைகளுக்கு திட்டப் பணிகளுக்கு பகிர்ந்தளிப்பதில் இருந்து குக்கிராமங்கள் கவனிக்கப்படாமல் இருப்பதால் அரசின் திட்ட பணிகள் கிடைப்பதில்லை.
மணப்பாறை ஊராட்சி பண்ணப்பட்டி ஊராட்சியை இரண்டாக பிரிக்ககோரி ஏற்கனவே ஊராட்சிகளை பிரிக்கும் திட்டத்தை முன்வைத்து கலெக்டர் மூலம் கருத்து கேட்கப்பட்டு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அப்போது தான் கிராமங்கள் மேம்படும். கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும். எனவே மணப்பாறை ஊராட்சி, பண்ணப்பட்டி ஊராட்சியை இரண்டாக பிரித்து பண்ணாங்கொம்பு தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ