திருச்சி மாநகரில் பரவலாக மழை மின்னல் தாக்கி தென்னை தீப்பற்றி எரிந்தது

திருச்சி, ஆக. 20: திருச்சி மாநகர் முழுவதும் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீ பற்றி எாிந்தது.திருச்சி மாநகரத்தில் தென் மேற்கு பருவ மழை தொடா்ந்து ஏமாற்றி வந்தது. கடந்த வரம் வெள்ளிக்கிழமை பரவலாக லேசான மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்கள் பகலில் வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் நேற்று பகலில் மழை வருவதுபோல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழைபெய்யாமல் ஏமாற்றி வந்தது. இந்நிலையில் இரவு சுமார் 8 மணி அளவில் லேசான தூரல் மழை பெய்யத் துவங்கியது. தொடர்ந்து டமார், டமார் என பயங்கர சத்தத்துடன் இடி இடித்தது. கண்ணை பறிப்பதுபோல் மின்னல் வெட்டியது.இவ்வாறு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்த ஆரம்பித்தது. இடி சத்தம் பயங்கரமாக கேட்டதால் பக்கத்தில்தான் எங்கோ இடி விழுந்து விட்டது என மக்கள் அச்சமடைந்தனர்.

அதேபோல் இடி மின்னலுக்கு திருச்சி கொடாப்பு ரோடு, உறையூா் காமாட்சி அம்மன் கோவில் தெரு ஆகிய இரண்டு இடங்களில் தென்னை மரங்கள் தீ பற்றி எாிந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் தீ அணைந்தது. இதேபோல் கருமண்டபம் பகுதியில் சாலையோரம் உள்ள வேப்பமரம் காற்றின் வேகம் காரணமாக ஒடிந்து கீழே விழுந்தது. அதே பகுதியில் வேப்பம் மரம் ஒடிந்து சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோ சேதமடைந்தது.குறிப்பாக திருச்சி மாநகரம், ரங்கம், மேல சிந்தாமணி, சந்திரம் பேருந்து நிலையம், மாா்க்கெட், அாியமங்கலம், செந்தண்ணீா–்புரம், துரைச்சாமிபுரம், பாலக்கரை, மேலபுதூா், மத்திய பேருந்து நிலையம், கருமண்டபம், கிராப்பட்டி, டிவிஎஸ் டோல்கேட், கல்லுக்குழி, ராம்ஜி நகா், தீரன் நகா், பிராட்டியூா், உரையூா் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மழை இரவு வரையில் நீடித்தது.

Related Stories: