பொன்னமராவதியில் மாவட்ட அளவில் தடகள போட்டி

பொன்னமராவதி, ஆக.20: பொன்னமராவதி அமல அன்னை பள்ளி புதுக்கோட்டை தடகள சங்கம் மற்றும் சுழற் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது.அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தடகள வீரகள் மாவட்டத்தில் அதிக தங்கப்பதக்கம் மற்றும் வௌ்ளிப்பதக்கம் பெற்று மாநிலப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். 6 தங்கம் 2வௌ்ளிப்பதக்கம் மற்றும் 1வெங்கலப் பதக்கம் பெற்று சாதித்துள்ளனர். பள்ளியின் முதல்வர் மரியபுஷ்பம் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார். இதில் ஆசிரியர்கள் பிரின்ஸ், பாலமுரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED கறம்பக்குடியில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம்