×

பிரதான மந்திரி ஓய்வூதிய திட்டத்தில் விவசாயிகள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் வேளாண் உதவி இயக்குனர் தகவல்

பொன்னமராவதி, ஆக.20: பிரதான் மந்திரி கிஸான் மந்தன் யோஜனா ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும்படி பொன்னமராவதி வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி கேட்டுக்கொள்கிறார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
விவசாயிகள் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறும் பாரத பிரதமரின் உன்னததிட்டம். விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் 18 முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் மட்டுமே இந்த ஓய்வூதியதிட்டத்தில் சேர முடியும். விவசாயிகள் தங்கள் வயதுக்கு ஏற்ப மாதந்தோறும் தொடக்கத்தில் கட்டும் ரூ.55 முதல் ரூ.200வரை என்ன தொகையோ அதே தொகையினை 60 வயது வரை செலுத்த வேண்டும். ஒரு மாதம், 3மாதம், 6மாதம், 1 வருடம் என விவசாயிகள் வசதிக்கேற்ப தங்கள் வங்கி கணக்கு மூலம் (ஆட்டோ டெபிட் முறையில்) பணம் செலுத்தும் வசதி, 61 வது வயது முதல் மாதம் தோறும் வாழ்நாள் முழுவதும் ரூ.3000 பணம் ஓய்வூதியமாக கிடைக்கும். எதிர்பாராத விதமாக பணம் கட்டியவர் இறந்து போனால் வாரிசு தாரர்களுக்கு தொடர்ந்து மாதம் ரூ.1500 பணம் ஓய்வூதியமாக கிடைக்கும். விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு இத்திட்டத்தில் தொடர விருப்பம் இல்லை என்றால் கட்டிய பணத்தை வட்டியுடன் திரும்ப பெறும் வசதி. சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் பெயரில் நிலம் இருந்தாலும், 40 வயதை கடந்து விட்டது என்றால் தனது குடும்பத்தில் உள்ள மனைவி, மகன், மகள் என அவர்களது பெயரில் இத்திட்டத்தில் இணையலாம். அரசு ஊழியர்கள், வரி செலுத்துபவர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது.விசாயிகள் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய அருகாமையில் உள்ள பொது சேவை மையம் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளவும். வேளாண் உலகத்தை தங்கள் உள்ளங்கையில் கொண்டு வரும் இந்த உழவன் செயலியை உடனே பதிவிறக்கம் செய்து வேளாண் மக்கள் பயன் பெறும்படி பொன்னமராவதி வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...