கறம்பக்குடியில் நூலகர் தினவிழா

கறம்பக்குடி, ஆக.20: கறம்பக்குடி கிளை நூலகத்தில் நூலகர் தந்தை
அரங்கநாதன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நூலகர் தின விழா கொண்டாடப்பட்டது. நூலகர் அண்ணாமலை வரவேற்று பேசினார். நூலகர் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. எவரெஸ்ட் சுரேஷ், ரோட்டரி சங்க செயலாளர் இளைய மனோகரன், கறம்பக்குடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஞானசேகரன், வாசகர் வட்ட நூலக பொருளாளர் முகமது ஜான்,
விநாயக மூர்த்தி, சிவ பிராகாசம், ஆசிரியை உஷாராணி, ஆசிரியர் முருகேசன் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நூலகர் சரஸ்வதி நன்றி கூறினார். கிளை நூலகத்தில் சுதந்திர தின விழாவும் கொண்டாடப்பட்டது.

Tags :
× RELATED கறம்பக்குடியில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம்