×

அன்னவாசலில் சிறப்பு குறைதீர் முகாம்

இலுப்பூர், ஆக.20: அன்னவாலில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 560 மனுக்கள் பெறப்பட்டன.அன்னவாசலில் தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு குறைதீர் முகாமிற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளாக மனுக்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 560 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட துறைக்கு ஒருவார காலத்திற்குள் அனுப்பப்பட்டு, இம்மனுக்கள் மீது ஒருமாத காலத்திற்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் குடிநீர்வசதி, மின்விளக்கு வசதி, சாலைவசதி, சுகாதாரம் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்பட உள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் பொதுமக்களிடமிருந்து இந்த மாதம் முழுவதும் மனுக்கள் பெறப்பட்டு அடுத்த செப்டம்பர் மாத இறுதிக்குள் இம்மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) சிவக்குமாரி, வட்டாட்சியர் முருகப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷாராணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறி பார்...