×

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்களுக்கு அளவெடுக்கும் முகாம்

அறந்தாங்கி, ஆக.20:அறந்தாங்கி வட்டார வள மையத்தில் முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி உள்ளடங்கிய கல்வி மூலம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் அளவெடுக்கும் அளவிட்டு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை வட்டார கல்வி அலுவலர் அருள் தொடங்கி வைத்தார்.புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் மற்றும்அறந்தாங்கி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி உள்ளடங்கிய கல்வி மூலம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக மருத்துவ முகாமில் கலந்து கொண்ட தகுதியுடைய மாணவர்களுக்கு மாற்றி அமைக்கப்பட்ட காலணி, தடுப்பு படை உள்ளிட்ட உதவி உபகரணங்களுக்கு அளவெடுக்கும் முகமானது அறந்தாங்கி டி.இ.எல்.சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.இம்முகாமில் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் மற்றும் மணமேல்குடி ஆகியவற்றிலிருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அலிம்கோ நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வருகை தந்து மாணவர்களுக்கு அளவெடுத்தனர் .
இம்முகாம் ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் செந்தில், சசிகலா, பெரியநாயகி மற்றும் இயன்முறை மருத்துவர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...