×

கூடுதலாக சிசிடிவி பொருத்தப்பட்டு குற்றசெயல்கள் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் பெரம்பலூர் புதிய எஸ்பி பேட்டி

பெரம்பலூர்,ஆக.20: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி திஷாமித்தல் திருப்பூர் மாவட்ட எஸ்பியாக பணி மாறுதல் பெற்றதைத் தொடர்ந்து புதிய எஸ்பி யாக நிஷா பார்த்திபன் நேற்று மாலை பொறுப்பே ற்றுக் கொண்டார். பின்னர் பத்திரிக்கையாளர் சந்தி ப்பின்போது அளித்தப் பேட்டியில் எஸ்பி நிஷா பார்த்திபன் தெரிவித்ததா வது : பெரம்பலூர் மாவட்டத்தின் மையத்திலேயே மிக நீண்ட தூரத்திற்கு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ் சாலை உள்ளது. இதில் சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கவும், போக்கு வரத்து விதிமீறல்களில் ஈடுபடு வோருக்கு, முதல்கட்டமாக மாவட்ட காவல்துறை சார் பாக கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாக னங்களை ஓட்டவேண்டும். குடித்துவிட்டோ, அதிவேக மா கவோ, அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டோ வாகன ங்களை இயக்கக்கூடா தென விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகும் சாலைப் போக்குவர த்து விதிமீறல்களில் ஈடுபடு வோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.முக்கிய இடங்களில் சிசி டிவி கேமராக்கள் பொறுத்தியும், ஏற்கனவே பயன் பாட்டிலுள்ள சிசி டிவி கேமராக்களைக் கொண் டும் கண்காணிப்பு நட வடி க்கைகள் தீவிரப் படுத்தப் படும். இதன்மூலம் பெரம் பலூர் மாவட்டத்தில் குற்ற செயல்கள் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப் படுத்தப்படும்.

பெரம்பலூர் நகரில் ஷேர் ஆட்டோக்கள் போக்குவ ரத்து விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. முத ல்கட்டமாக ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படும். அதன்பிறகு விதி மீறல்க ளில் ஈடுபடும் ஷேர் ஆட்டோக்கள் மீது சட்டப்பூர்வ மான நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.குற்றநடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு இரவுநேர ரோந்துப் பணிகள் அதிகரி க்கப்படும்.குறிப்பாக பெர ம்பலூர் புதுபஸ் டாண்டிலு ள்ள புறக்காவல் நிலைய த்தில் தேவையைக் கருதி, போலீசாரின் எண் ணிக் கை அதிகரிக்கப்படும்.மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற சம்பவ ங்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறை சார்பாக மேற் கொள்ளப் படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், வணிகர்கள் முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும் எனத் தெரிவித்தார்.


Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...