×

அணைக்குடம் திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தா.பழூர், ஆக. 20: அணைக்குடம் திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. 15 ஆண்டுகளானது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் ஒன்றிணைந்து கும்பாபிஷேக விழாவை நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது