×

காரைக்காலில் இந்து முன்னணி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

காரைக்கால், ஆக.20: காரைக்காலில் இந்து முன்னணியின் கொள்கை விளக்க பொது பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காரைக்கால் திருமலைராயன்பட்டினம் கடைவீதியில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திருமலைராயன்பட்டினம் இந்து முன்னணி அமைப்பாளர் கார்த்திக் தலைமை வகித்தார். இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் உறுப்பினரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் மத்திய அரசு வழக்கறிஞருமான குற்றாலநாதன், மாவட்ட இந்து முன்னணி தலைவர் விஜயன், மாநில பாஜக செயலாளர் அருள் முருகன், செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, இந்து முன்னணியின் கொள்கைகள் அது செய்த சாதனைகள், இந்து முன்னணியின் நீண்டகால கோரிக்கையான 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் அவசியம் பற்றி பேசினர். முடிவில், மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED பயணியிடம் நகை பறித்த வாலிபர் சிறையிலடைப்பு