×

கண்ணாங்குளம் மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம்

கொள்ளிடம், ஆக.20: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கண்ணாங்குளம் மாரியம்மன் கோயில் வருடந்தோறும் ஆடி வெள்ளிக்கிழமையன்று செடில் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மிகவும் பழமையான கண்ணாங்குளம் மாரியம்மன் கோயில் செடல் திருவிழாவில் முதல் நிகழ்ச்சியாக முதல் நாள் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சீயாளம், கண்ணாங்குளம், ஆயங்குடிபள்ளம், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட 7 கிராமங்களுக்கு இரவு நேரத்தில் அம்மன் வீதியுலா சென்று வரும் நிகழ்ச்சி 10 நாட்களும் நடைபெற்றது.தொடர்ந்து 10ம் நாள் மாவிளக்கு போடுதல், முடி காணிக்கை செலுத்துதல், காதணி விழா, நேர்த்திக் கடன் செலுத்துதல் நிகழ்ச்சியும், மதியம் பால் காவடி, அலகுக் காவடி எடுத்து வந்து பக்தர்கள் ஆலயத்தை அடைந்தவுடன் அம்மனுக்கு பால் அபிஷேகமும், அதைத் தொடர்ந்து, மாலை செடல் விழாவும் நடைபெற்றது. பக்தர் செடிலில் தொங்கிய படியே பக்தர்களுக்கு எலுமிச்சைபழம், பிரசாதமும் வழங்குதலும் நடைபெற்றது.பின்னர் இரவு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய கோழி, ஆடு மற்றும் மாடுகள் ஏலத்தில் விடப்பட்டன. விழா ஏற்பாடுகளை 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.



Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...