×

பால் விலையை ரூ.40 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் விவசாய சங்கம் வலியுறுத்தல்

கடவூர், ஆக. 20: பால் விலையை 40 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் தங்கவேல் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தற்பொழுது அரசு பால் விலை 28 ரூபாயிலிருந்து 32 ரூபாயாக உயர்த்தி உள்ளது. இது கட்டுப்படுயான விலை இல்லை. ஒரு மாட்டிற்கு தீவனம், பசுந்தாள் மற்றும் வைக்கோல் ஆகியவை வழங்க வேண்டும். மேலும் கண்காணிப்பு கூலியும் உள்ளது. ஒரு லிட்டர் பாலுக்கு 45 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் அரசு 32 ரூபாய் தான் உயர்த்தி வழங்கி உள்ளது. மீதி 13 ரூபாய் விவசாயிகள் தலையில் தான் உள்ளது. இந்த நஷ்டத்திற்கு மான்யமாக டீசல் விலை ஏறினால் மோட்டார் தொழில் வாடகையும் உயரும். அது போல பாலிற்கும் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பால் விலையை உயர்த்தி 5 ஆண்டுகள் ஆகிறது. அரசு ஊழியர்களுக்கு மூன்றாண்டுக்கு ஒரு முறை சம்பளம் உயருகிறது. அது போல பாலிற்கும் மூன்றாண்டிற்கு ஒரு முறை விலையை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த விலை ஏற்றம் விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை என கூறியுள்ளார்.


Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்