×

நஞ்சை காளக்குறிச்சியில் சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கரூர், ஆக. 20: அமராவதி வடிநிலக் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள், கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை அரவக்குறிச்சி ஒன்றியம் நஞ்சைகாள குறிச்சியில் கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டார். அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொது சுகாதாரத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வந்தது. மருத்துவ முகாமை பார்வையிட்டு சிகிச்சை, பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்தார்.பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை, கண்பரிசோதனை, இசிஜி, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஸ்கேன், சித்த மருத்துவப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மழைக் காலங்களில் தேங்கும் நீரில் பரவும் விதம், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் முறை, விளக்க காட்சிப்பொருட்கள் அமைக்கப்பட்டிருந்ததையும் பார்வையிட்டார்.


Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...