×

நகராட்சி வணிக வளாகத்தில் பூட்டி கிடக்கும் கழிப்பிடம்

உடுமலை,ஆக.20:உடுமலை தளி சாலையில், நகராட்சி வணிக வளாகம் உள்ளது. 3 தளங்களை கொண்ட கட்டிடம் உள்ளது. இங்கு 78 கடைகள் உள்ளன. வணிக வளாகத்துக்கு தினசரி ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் வணிகர்களும், வாடிக்கையாளர்களும் அவதிப்படுகின்றனர்.

வணிக வளாகத்தில் உள்ள கழிவறை, உரிய பராமரிப்பின்றி எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதன் அருகில் உள்ள ரேஷன் கடை, வங்கி, ஆய்வு மாளிகைக்கு அமைச்சரிடம் மனு அளிக்க வரும் பொதுமக்கள் ஆகியோர் கழிவறைக்காக நகராட்சி வணிக வளாகத்துக்கு வருகின்றனர். ஆனால் பூட்டி கிடப்பதால் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.அருகில் உள்ள தாகூர் மாளிகைக்கு சென்றால் அங்கும் கழிப்பிடம் பூட்டிக்கிடக்கிறது. இதனால் பெரும் அவதிப்படுகின்றனர்.எனவே, நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள கழிப்பிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா