மகளின் கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி கலெக்டரிடம் தந்தை மனு

திருப்பூர்,ஆக.20: தனது மகளின் கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும்,தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் செல்வராஜ் (59) என்பவர் தனது குடும்பத்துடன் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:  திருப்பூர் கொங்கு மெயின் ரோடு செல்வலட்சுமி நகர் பகுதியில் வசித்து வருகிறேன். எனது இளைய மகள் பிரியா, கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரை 10 வருடத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்தாள். அவர்களுக்கு 9 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷ்குமாரை பிரிந்து எனது மகள் பிரியா மற்றும் குழந்தைகள் எங்களுடன் இருந்து வந்தார்.

கடந்த 1ம் தேதி அருள்ஜோதி நகரிலுள்ள ரமேஷ்குமாரின் தாய் வீட்டில் வைத்து பேசி சமாதானம் ஏற்படுத்தி கொள்ளலாம் என கூறி பிரியாவை அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். பின்னர்  வடக்கு போலீசார் ரமேஷ்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனர். எனது மகள் கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்தில் நடத்தி குறுகிய காலத்தில் குற்றவாளிக்கு கடும்  தண்டனை வாங்கி தர போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் எங்களது குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Related Stories: