×

கூடுதல் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

ஊட்டி, ஆக. 20: கூடுதல் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் தீவன பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு 2019-20ம் ஆண்டு கூடுதல் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்திற்கு 20 ஏக்கர் பரப்பளவில் தீவன பயிர் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. தீவன சோளம் மற்றும் தீவன தட்டப்பயிர் (காராமணி) பயிரிட விரும்பும் விவசாயிகள் கறவை பசுக்கள், ஆடுகள் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 0.25 ஏக்கர் (25 சென்ட்) நீர்பாசன வசதியுடன் கூடிய சொந்த நிலம் பயிரிட வைத்திருக்க வேண்டும். அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 2 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விவசாயிகள் தங்களது விண்ணப்பங்களை அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகங்களில் வழங்கிட இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி