×

மஞ்சூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மேற்கூரையை அகற்றாததால் நோயாளிகள் அச்சம்

மஞ்சூர், ஆக. 20: மஞ்சூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைக்கு விழுந்த மேற்கூரையை அகற்றாததால் நோயாளிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை இடைவிடாமல் கனமழை பெய்தது. இந்த மழையால் மஞ்சூர், குந்தா பாலம், சேரனூர், மேல்குந்தா, மெரிலேண்ட், பிக்கட்டி, பாரதியார் புதுார், தக்கர்பாபா நகர், எமரால்டு, ஸ்ரீராம் நகர், புதுஅட்டுபாயில், இந்திரா நகர் உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தது. நூற்றுக்கணக்காண வீடுகளின் வாசல் மற்றும் பின்புறங்களில் தடுப்பு சுவர்களும் இடிந்தது. மஞ்சூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்தா மருத்துவ பிரிவு முன்புறம் நிழலுக்காக தகரத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில், இந்த மேற்கூரை ஒரு புறமாக சரிந்து விழுந்தது. அப்போது யாரும் அருகில் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.

 இந்நிலையில் மேற்கூறை விழுந்து ஒருவார காலத்திற்கும் மேலாகியும், அதை சரிசெய்யாமலும், அகற்றாமல் சித்தாபிரிவு செல்லும் நுழைவு வாயில் முன்புறம் அபாயகர நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது. இதில் ரத்த பரிசோதனை மையம் மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கும் பகுதி அமைந்துள்ளதால், இவ்வழியாக பரிசோதனை, மாத்திரை வாங்க செல்லும் நோயாளிகள் பெரும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.  எனவே அபாயகர நிலையில் உள்ள மேற்கூரையை நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் முன் அதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...