×

ஊட்டி அருகே மூன்று கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி

ஊட்டி, ஆக. 20:  ஊட்டி அருகேயுள்ள மஞ்சக்கொம்பை பகுதியில் மூன்று கால்களுடன் பிறந்துள்ள ஆட்டுக் குட்டியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். ஊட்டி அருகேயுள்ள மஞ்சக்கொம்ைப பகுதியை சேர்ந்தவர் சிங்கி. இவர், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.  இந்நிலையில், இவர் வளர்த்து வரும் ஒரு ஆடு நேற்று முன்தினம் ஆட்டுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்த ஆட்டு குட்டிக்கு மூன்று கால் மட்டுமே உள்ளது.  முன் பகுதியில் இரு கால் உள்ளன. பின்னங்கால்களில் ஒன்று மட்டுமே உள்ளது. இது பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது. இதனால், அப்பகுதிகளில் உள்ள மக்கள் மூன்று கால்களுடன் பிறந்துள்ள ஆட்டுக் குட்டியை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

Tags :
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி