பொது பாதை ஆக்கிரமிப்பு

கோவை, ஆக. 20:   கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில், அளித்த புகார் மனு: கோவை மாவட்டம் அன்னூர் சரகத்துக்கு உட்பட்ட காட்டம்பட்டி கிராமத்தில் க.ச.எண்458/3ஏ என்ற பகுதியில் ஊர்மக்கள் பயன்படுத்தும் பொது வழித்தடம் உள்ளது. இது, வருவாய் ஆவணங்களில் பொது வண்டித்தடமாக உள்ளது. சுமார் 16 அடி அகலம் உள்ள இந்த ரோட்டை, சிலர் ஆக்கிரமித்து, பொக்லைன்இயந்திரம் மூலம் 6 அடி ஆழம், 10 அடி அகலத்தில் குழி தோண்டி, வாகனங்கள் செல்ல முடியாத வகையில் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.இந்த பொதுவழித்தடத்தை ஆக்கிரமித்து, சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன்,இச்சாலையை பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். இதேபோல், கோவை மாவட்ட எஸ்.பி.யிடமும் புகார் மனு அளித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: