கருமத்தம்பட்டியில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

சோமனூர், ஆக. 20:  கருமத்தம்பட்டி டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பாஸ்கரன் கடந்த 15 நாட்களுக்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக பேரூர் டிஎஸ்பி., பாலமுருகன் கருமத்தம்பட்டியின் புதிய டிஎஸ்பியாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். கருமத்தம்பட்டியில் துணை காவல் துறை கண்காணிப்பகம் அமைக்கப்பட்டதை அடுத்து ஐந்தாவது டிஎஸ்பியாக பாலமுருகன் பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட டிஎஸ்பி., பாலமுருகனுக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: