ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக.20:  கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை செயலாளர் ஜெகதீசன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தென்காசியில் நடந்த மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.  

Advertising
Advertising

ஊரக வளர்ச்சி துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். பெரிய ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிடவேண்டும். ஊராட்சி செயலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் உள்ளிட்ட பலன்களை வழங்க வேண்டும். உள்ளிட்ட 22 அம்சங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: