இந்திய ராணுவ வீரர்களுக்கு ஈஷா யோகா மையத்தில் சிறப்பு பயிற்சி

கோவை,ஆக.20:இந்திய ராணுவ வீரர்களுக்கு கோவை ஈஷா யோகா மையத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை  ஈஷாயோகா மையம் சார்பில், இந்திய ராணுவ வீரர்களுக்கு ‘ஹதயோகா’ என்னும் சிறப்பு பயிற்சி  வகுப்பு பூண்டி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மைய வளாகத்தில் நடந்தது.  இதில், இந்திய ராணுவ அதிகாரிகள், ஜே.சி.ஓ அதிகாரிகள் உட்பட 64  பேர் பங்கேற்றனர்.அவர்களுக்கு அங்கமர்த்தனா, சூர்ய க்ரியா, உப-யோகா,  அம்மந்திர உச்சாடனை, ஈஷா கிரியா உள்ளிட்ட யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.  கடந்த 6ம் தேதி துவங்கிய இப்பயிற்சி வகுப்பு நேற்று நிறைவடைந்தது. இதுகுறித்து ஈஷா  யோகா மைய நிர்வாகிகள் கூறியதாவது:

ஈஷா யோகா மையம் சார்பில் தொடர்ச்சியாக இந்திய  ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு 3  பி.எஸ்.எப் குழுவினருக்கும், ராணுவ தரைப்படை குழுவினருக்கும் 14 நாள் ஹதயோகா யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல், கடந்த ஜூன் மாதம் அந்தமான் நிக்கோபர் தீவில்  உள்ள இந்திய கடற்படையின் மிதக்கும் துறைமுகத்தில் நடந்த யோகா தின விழாவில்  சிறப்பு விருந்தினராக சத்குரு பங்கேற்று, பயிற்சி அளித்தார். இந்திய ராணுவத்தின் முப்படை  வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம்  உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு சவால்களை எளிதாக எதிர்கொள்ள முடியும். இவ்வாறு ஈஷா யோகா மைய நிர்வாகிகள் கூறினர்.

Related Stories: