பாங்க் ஆப் பரோடா கலந்தாய்வு கூட்டம்

கோவை, ஆக.20:பாங்க் ஆப் பரோடா பிராந்தியத்திலுள்ள கிளை மேலாளர் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெற்றது. இதில் வங்கியின் தலைமை அலுவலக பொதுமேலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். பிராந்திய துணை பொது மேலாளர் செல்வராஜூ,  துணை மேலாளர் ஜெய்கிஷன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

இதில் வங்கி கிளைகளில் திறனுக்கான சுய ஆய்வு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த பல்வேறு தொழில் துறைகளுக்கும், மூத்த குடிமக்கள், விவசாயிகள், சிறு தொழில் முனைவோருக்கு கடன் திட்டங்களில் முக்கியத்துவம் வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.இந்த கூட்டு ஆலோசனைகள் ஒன்றிணைக்கப்பட்டு மாநில அளவிலான அமைப்புக்கு மேல் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டது. இறுதியாக தேசிய அளவில் வங்கிகளுக்கு இடையே செயல்பாடுகள் மற்றும் சேவைகளின் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு பரிசீலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: