மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

கோவை, ஆக. 20: கோவையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கோவை  சவுரிபாளையம் புனித சவேரியார் நல்லடக்க நற்பணிக்குழு அறக்கட்டளை சார்பில்,  அரசு ெபாதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை  வழங்கும் விழா சவுரிபாளையத்தில் உள்ள புனித பிலோமினா உயர்நிலை  பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். புனித சவேரியார் அறக்கட்டளை செயலாளர் வின்சென்ட்  சேவியர், பொருளாளர் மரிய ஜெரோம் அந்தோணிசாமி, துணை தலைவர் டேனியல்  ஜெகராஜ், துணை செயலாளர் பீட்டர் லெயோனார்ட், துணை பொருளாளர் சகாயம்,  செயற்குழு உறுப்பினர் சாந்தப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertising
Advertising

அறக்கட்டளை  தலைவர் ஸ்டேன்லி கில்பர்ட், ஊடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில்  பயின்று பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக  மதிப்பெண் பெற்ற 3 மாணவ மாணவிகளுக்கும்,  புனித பிலோமினா  உயர்நிலை பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3  மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை மற்றும் கேடயம் வழங்கினார்.  இதையொட்டி, மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை  புனித பிலோமினா உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் டைட்டஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்.

Related Stories: