நீதிமன்றத்தில் தொடுதிரை கருவி பழுது

கோவை, ஆக.20: கோவை நீதிமன்றத்தில் வழக்கின் விபரங்களை அறிய வைக்கப்பட்டிருந்த தொடுதிரை கருவி பழுதானதால் வழக்கறிஞர்கள் அவதியடைந்துள்ளனர்.கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2018ல் வழக்குகளின் விபரங்களை அறிய தொடுதிரை கருவி வைக்கப்பட்டது. இதில் வழக்கு எண்ணை பதிவு செய்தால் அவற்றின் தற்போதைய நிலை, அடுத்த வாய்தா தேதி, தீர்ப்பு நகல், என முழுவிபரமும் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

Advertising
Advertising

இதை வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் கருவி பழுதானது. பின் சரிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கருவி பழுதாகியுள்ளதால் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தொடுதிரை கருவியை சீரமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: