மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

கோவை, ஆக.20: கோவை ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பார்வதி (80), இவரிடம் கடந்த 2013ம் ஆண்டு கார்பென்டராக பணியாற்றி வந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அப்துல்லா (30), என்பவர் குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து மூதாட்டி வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வர சென்ற போது உள்ளே நுழைந்த அப்துல்லா மூதாட்டியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி அவர் அணிந்திருந்த 5.5 பவுன் தங்க நகையை பறித்து தப்பி ஓடினான். இது குறித்த தகவலின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல்லாவை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று தலைமை நீதிபதி சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது குற்றஞ்சாட்டப்பட்ட அப்துல்லாவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertising
Advertising

Related Stories: