குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிர்ப்பு

ஈரோடு, ஆக. 20: குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கங்காபுரம் ஆசிரியர்காலனி, அம்மன்நகர், எல்லப்பாளையம், ஆயப்பாளி, கொங்கம்பாளையம், மாமரத்துபாளையம் பகுதி மக்கள் கோரிக்கை தொடர்பாக நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

ஈரோடு தாலுகா கங்காபுரம் கிராம பகுதியில் 23.41 ஏக்கர் பூமியை ரோடு ஏற்படுத்தி மனை நிலங்களாக பிரித்து ஆசிரியர் காலனி என பெயரிடப்பட்டு 276 வீட்டுமனைகள் உள்ளது.

இதை நாங்கள் கிரையம் செய்து அனுபவித்து வருகிறோம். இங்கு பூங்கா, சிறுவர் பள்ளி என பிரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடக்கழிவு மேலாண்மை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஆசிரியர் காலனிக்கு அருகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊர்களுக்கு மத்தியில் திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்துவதால் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடும். எனவே, ஆசிரியர் காலனி மக்களின் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பதை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: