மக்கள் குறைதீர் கூட்டத்தில் 343 மனு பெறப்பட்டது

ஈரோடு, ஆக. 20: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.  கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில்கடன், குடிநீர், சாலை வசதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 343 மனுக்கள் வரப்பெற்றது.

Advertising
Advertising

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், கூட்டத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதிநாள் முகாம் மனுக்கள் குறித்தும், அந்த மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தார். 4 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும், தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

Related Stories: