மூப்பனார் பிறந்தநாள் விழா தமாகா.,வினர் மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு, ஆக.20:  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனார் பிறந்தநாள் அக் கட்சியினர் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஈரோட்டில் ஜிஹெச் ரவுண்டானா அருகில் உள்ள மூப்பனார் படத்திற்கு தமாகா.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர் விடியல் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Advertising
Advertising

இதில், மண்டல தலைவர் மணியன், பொது செயலாளர்கள் ரபீக், ராமன், லட்சுமணன், தொண்டர் அணி சரவணன், எஸ்சி.,எஸ்டி., பிரிவு கண்ணம்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள மன வளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு தமாகா.,சார்பில் வழங்கப்பட்டது.

Related Stories: