×

காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஆக.20:  ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்கர்பாபு முன்னிலை வகித்தார். இதில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு முன் பெரிய கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற வளர்ச்சி துறை அலுவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அனைத்தும் ரத்து செய்ய வேண்டும். அரசு ஏற்று கொண்ட மகாத்மா காந்தி வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.  இதில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது