நீர் மேலாண்மை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் மாரத்தான்

ஈரோடு,ஆக.20:   மரம் நடுவதன் அவசியம், நீர் மேலாண்மை உள்ளிட்டவைகளை வலியுறுத்தி ஈரோட்டில்  நேற்று காலை கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடந்தது. ஈரோடு  வேளாளர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற இந்த மாரத்தான் ஓட்டம்,   கலெக்டர்  அலுவலகத்தில் துவங்கி பெருந்துறை சாலை வழியாக சென்று திண்டல் வேளாளர்  கல்லூரியில் நிறைவடைந்தது. முன்னதாக, மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் கதிரவன்,  எஸ்.பி. சக்திகணேசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் கல்லூரி  நிர்வாகிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மத்திய பட்ஜெட்டை கண்டித்து மா. கம்யூ. ஆர்ப்பாட்டம்