மாருதி பள்ளியில்

சுதந்திர தின விழாஆத்தூர், ஆக. 20: ஆத்தூர் வட்டம், மணிவிழுந்தான் தெற்கில் அமைந்துள்ள மாருதி மேல்நிலைப்பள்ளி மற்றும் மாருதி நர்சரி பிரைமரி பள்ளியில், 73வது சுதந்திர தினவிழா  மற்றும் பள்ளியின் 19வது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாருதி கல்வி அறக்கட்டளையின் தலைவர் செல்வம், செயலாளர் கோவிந்தசாமி, பொருளாளர் ராஜா, இயக்குனர்கள் சுந்தரம், ராமசாமி, பிரபு, இளங்கோ, சிவபிரகாசம், ராஜவேல் மற்றும் நிர்வாக அதிகாரி கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னதாக, மாருதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் குமார், மாருதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோர் வரவேற்றனர். மேலும், நிர்வாகத்தினர் விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தனர். உடற்கல்வி இயக்குநர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: