×

அன்னபூரணா பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

சேலம், ஆக.20: அன்னபூரணா ெபாறியியல் கல்லூரியில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சேலம் பெரியசீரகாபாடியிலுள்ள அன்னபூரணா பொறியியல் கல்லூரியில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு, கல்லூரி முதல்வர் அன்புச்செழியன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சரவணன் முன்னிலை வகித்தார். விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி கல்வி குழுமத்தின் இயக்குனர் ராமசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அவர் பேசுகையில், ‘இந்திய தேச விடுதலைக்காக போராடிய தியாகிகள் செய்த மகத்தான தியாகங்களை எப்போதும் நினைவுகூர வேண்டும். உலகின் வல்லரசாகவும், நல்லரசாகவும் இந்தியாவை உருவாக்குவதே அந்த புனிதர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்,’ என்றார்.

விழாவில், கல்லூரி முதல்வர் அன்புச்செழியன் பேசுகையில், ‘நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் வாக்குக்கிணங்க நாம் அனைவரும் நீரின் மகத்துவத்தை உணர்ந்து நீரினை சேமிக்க வேண்டும்,’ என்றார். என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். விழாவில், முதலாமாண்டு டீன் சரவணன், நிர்வாக அதிகாரி விக்னேஷ், துறைத்தலைவர்கள்,  பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் சண்முகவேல் செய்திருந்தார்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்