ஆட்டையாம்பட்டியில் மழையால் நிரம்பிய பாப்பாரப்பட்டி ஏரி

ஆட்டையாம்பட்டி, ஆக.20:  ஆட்டையாம்பட்டியில், மழையால் பாப்பாரப்பட்டி ஏரி நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள பாப்பாரப்பட்டி ஏரி, 65 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. தற்போது பல்வேறு ஆக்கிரமிப்புகளால், 45 ஏக்கர் பரப்பில் மட்டுமே இந்த ஏரி உள்ளது. ஏரிக்கு திருமணிமுத்தாறு ஆற்றிலிருந்து வரும் நீர், வழியில் உள்ள வீரபாண்டி, பைரோஜி, புதுப்பட்டி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியபின், பாப்பாரப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஆண்டில் மழை பொய்த்ததால் திருமணிமுத்தாற்றில், நீர்வரத்தின்றி சாக்கடை நீர் மற்றும் சாயக்கழிவு நீர் கலந்து வருவதால் ஏரி மாசடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் பெய்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து வந்த வன்னம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழையால், பாப்பாரப்பட்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

Related Stories: