×

திமுக இலக்கிய அணி சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி

இளம்பிள்ளை, ஆக. 20: மகுடஞ்சாவடியில், மேற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி மற்றும் முரசொலி அறக்கட்டளை சார்பில் அறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சங்ககிரி, இடைப்பாடி, கொளத்தூர், தாரமங்கலம், இடங்கணசாலை, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளும், 7 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகளும் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்படுவோர் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ காவேரி, திமுக நிர்வாகிகள் அன்பழகன், சுந்தரம், சம்பத்குமார், பச்சமுத்து, பரமசிவம், நல்லதம்பி, தவசிராஜா, மணிகண்டன், செல்வம், சரவணன், கந்தசாமி, சண்முகம், கமலக்கண்ணன், மகேந்திரன், அழகப்பன், சுரேஷ்குமார், நாகேந்திரன் பழனியப்பன் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்