கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் ஓமலூர் வட்டாரத்தில் ஏரிகளை நிரப்ப வேண்டும்

ஓமலூர், ஆக.20: சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைப்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்தார். ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொழிலாளர் அணி மேற்கு மாவட்ட தலைவர் பச்சினம்பட்டி சின்னையன், முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தார். அப்போது, தற்போது மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. அதனால், மேட்டூர் அணையில் இருந்து பம்பிங் சிஸ்டம் மூலம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்களை நிரப்ப வேண்டும். மேலும், உபரிநீரை மேச்சேரி வழியாக காமனேரிக்கு கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் முதல்வர் கூறினார்.

Related Stories: