சேலம் மத்திய மைய அளவில் நடந்த கேரம் போட்டியில் அரசு பள்ளி சாம்பியன்

சேலம், ஆக.20:சேலம் மத்திய மைய அளவில் நடந்த கேரம் போட்டியில், உடையாப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் குறுவட்ட, மைய அளவிலான கேரம் போட்டிகளை பள்ளி மாணவர்களுக்கிடையே நடத்தி வருகிறது. சேலம் மத்திய மைய அளவிலான கேரம் போட்டி புனிதபால் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. 45 பள்ளிகளை சேர்ந்த 200 மாணவ, மாணவிகள், இப்போட்டியில் பங்கேற்றனர். போட்டியை சிஎஸ்ஐ குட்ஷெப்பர்டு பள்ளி முதல்வர் கிளாடிஸ் அனிதா, தாளாளர் மதிவாணன் தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உடையாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி  மாணவர்கள், அதிக புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்தனர்.

2ம் இடத்தை குளுனி பள்ளியும், 3ம் இடத்தை வாய்க்கால்பட்டறை அரசு உயர்நிலைப்பள்ளியும் பிடித்தது. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியிலும் உடையாப்பட்டி அரசு பள்ளி முதலிடத்தை பெற்றது. ஒட்டுமொத்த சாம்பியனாகவும் தேர்வானது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, புனிதபால் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் மாணிக்கம் பரிசுகளை வழங்கினார். இதில், பள்ளி உடற்கல்வி இயக்குநர் தேவபிரபு மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: